இராணுவத்திற்கும் கொரோனா வைரஸ் தாக்கம் - நேற்று பாதிக்கப்பட்டோர் விபரம் - News View

Breaking

Post Top Ad

Wednesday, April 29, 2020

இராணுவத்திற்கும் கொரோனா வைரஸ் தாக்கம் - நேற்று பாதிக்கப்பட்டோர் விபரம்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 31 பேர் நேற்று (செவ்வாய்க்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தொடர்பான தகவலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்டுள்ளார்.

அந்தவகையில் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டவர்களில் 21 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் எனவும் மேலும் 6 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் ஏனைய 04 பேரும் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கடற்படையினர்களில் பெரும்பாலோர் வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்தவர்கள் என்றும் மற்றவர்கள் மெதிரிகிரிய, அரநாயக்க, பொல்பிதிகம, அகலவத்தை மற்றும் ஹபரண பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 619 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 478 பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad