வனஜீவராசிகள் பூங்காவில் துப்பாக்கிச்சூடு - ஒருவர் காயம் - News View

Breaking

Post Top Ad

Sunday, April 5, 2020

வனஜீவராசிகள் பூங்காவில் துப்பாக்கிச்சூடு - ஒருவர் காயம்

லுணுகம்வெஹெர பகுதியில் இடம்பெற்றுள்ள துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

லுணுகம்வெஹெர, கலுபாலம வனஜீவராசிகள் பூங்காவினுள்ளேயே இச்சம்பவம் இன்று (05) மாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த பூங்காவைச் சேர்ந்த அதிகாரியொருவர் கடமையில் இருந்தபோது, அப்பூங்காவினுள் அனுமதியின்றி மூவர் நுழைந்துள்ளனர்.

இவர்களை குறித்த அதிகாரி, கைது செய்ய முற்பட்ட வேளையில் குறித்த மூவரினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த வனஜீவராசி அதிகாரியும் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் அம்மூவரினுள் ஒருவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த சந்தேகநபர், தணமல்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

இச்சம்பவத்தில் தணமல்வில, கலுபாலம பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே காயமடைந்துள்ளார்.

ஏனைய இரண்டு சந்தேக நபர்களும் தப்பியோடியுள்ளனர். இவ்வாறு தப்பியோடியுள்ள இரு சந்தேக நபர்களையும் கைது செய்யும் முகமாக லுணுகம்வெஹெர பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad