ஐஸ் போதைப் பொருளை கடத்தி சென்றவர் விசேட அதிரடிப் படையினரால் கைது - News View

Breaking

Post Top Ad

Wednesday, April 29, 2020

ஐஸ் போதைப் பொருளை கடத்தி சென்றவர் விசேட அதிரடிப் படையினரால் கைது

பாறுக் ஷிஹான்

ஐஸ் போதைப் பொருளைக் கடத்திச் சென்ற ஒருவரை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விளினியடிப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (28) மாலை சந்தேக நபர் சந்தேகத்திற்கிடமாக நடமாடியதைக்கண்ட விசேட அதிரடிப் படையினர் 30 வயதான ஒருவரை 6 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைதான சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இன்று ஆஜர்படுத்தப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் மே 5 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டது.

அண்மைக்காலமாக சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வரும் நிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad