அமெரிக்காவை பலியெடுக்கிறது கொரோனா ! மரணிப்போரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கிறது ! - News View

Breaking

Post Top Ad

Saturday, April 4, 2020

அமெரிக்காவை பலியெடுக்கிறது கொரோனா ! மரணிப்போரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கிறது !

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு ஒரே நாளில் நேற்று மாத்திரம் ஆயிரத்து 331 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதேவேளை அங்கு நேற்று மாத்திரம் 34 ஆயிரத்து 194 பேர் புதிய கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

சீனாவின் ஹூபே மாகாணம் வுஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று நோய் தற்போது உலகம் முழுவதும் பரவி அதனது வீரியத்தை காண்பித்து மனித உயிர்களை பலியெடுத்து வருகின்றது. 

உலகம் முழுவதும் 206 நாடுகள் மற்றும் பிராந்தியங்களுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸ் பெரும் உயிரிழப்புக்களையும் பெரும் பாதிப்புக்களையும் ஏற்படுத்தி வருகின்றது. 

உலகளாவிய ரீதியில் 1,201,443 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் கொரோனா வைரஸால் இதுவரை 64,688 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதுவரை அமெரிக்காவில் மாத்திரம் 311,357 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, 8,452 பேர் இறந்துள்ளனர். 

கொரோனா எனும் ஆட்கொல்லி நோய்த் தொற்று இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவென தனது கோரத்தாண்டவமாடி மனித உயிர்களை பலியெடுத்து வருகின்றது.

No comments:

Post a Comment

Post Bottom Ad