சீனாவில் 30 நோயாளிகள் புதிதாக இனம்காணப்பட்டுள்ளனர் - News View

About Us

About Us

Breaking

Saturday, April 4, 2020

சீனாவில் 30 நோயாளிகள் புதிதாக இனம்காணப்பட்டுள்ளனர்

கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள 30 பேர் ஞாயிற்றுக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சீனா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இவர்களில் 25 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்த சீன பிரஜைகள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏனைய ஐவரும் சீனா - ஹொங்கொங் எல்லையிலுள்ள குவாங்டொங்கில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

கொரோனா வைரஸ் பரவுவதை தடுத்து நிறுத்தியுள்ள சீனா வெளிநாடுகளில் இருந்து வரும் நோய் தொற்றிற்கு இலக்கானவர்கள் நோயை பரப்பக்கூடும் என அச்சம் வெளியிட்டுள்ளது. 

சீனா வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் தனது நாட்டிற்குள் வருவதற்கும் தடை விதித்துள்ளதுடன் வெளிநாட்டு விமான சேவைகள் வாரத்திற்கு ஒரு முறையே சேவையில் ஈடுபடலாம் என்ற கட்டுப்பாட்டை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை சனிக்கிழமை மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர் என சீனாவின் தேசிய சுகாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வுகானிலேயே இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

No comments:

Post a Comment