உயிரிழப்பு அடுத்த மூன்று வாரங்களில் அமெரிக்காவில் பல மடங்காக அதிகரிக்கும் - பிரபல தொற்று நோயியல் நிபுணர் - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 25, 2020

உயிரிழப்பு அடுத்த மூன்று வாரங்களில் அமெரிக்காவில் பல மடங்காக அதிகரிக்கும் - பிரபல தொற்று நோயியல் நிபுணர்

அமெரிக்காவில் கொரோனா வைரசினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அடுத்த மூன்று வாரங்களில் உச்சநிலையை எட்டலாம் என அமெரிக்காவின் பிரபல தொற்று நோயியல் நிபுணர் எச்சரித்துள்ளார். 

அமெரிக்காவில் அடுத்த மூன்று வாரங்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை உச்சநிலையை அடையும் அந்த காலப்பகுதிக்குள் அனேகமான பாதிப்புகள் இடம்பெற்றிருக்கும் என அமெரிக்காவின் பிரபல தொற்று நோயியல் நிபுணர் ஐரா லொங்கினி தெரிவித்துள்ளார். 

அடுத்த மூன்று வாரங்களில் அமெரிக்காவில் உயிரிழப்பவர்களில் எண்ணிக்கை உயர்நிலையை அடையும் என தெரிவித்துள்ள அவர் இரண்டு மூன்று நாட்களில் இரட்டிப்பாகும் எனவும் தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவின் வேறு இரு நிபுணர்களும் இந்த கருத்தினை ஏற்றுக்கொண்டுள்ளனர். 

வன்டெர்பிட் பல்கலைகழகத்தின் தொற்று நோய் நிபுணர் வில்வியம் ஸ்காவ்வெனர் அடுத்த இரண்டு மூன்று வாரங்களில் உயிரிழப்பு உச்சநிலையை அடையும் என அவர் தெரிவித்துள்ளார். அடுத்த மூன்று முதல் ஆறு வாரங்களில் முக்கியமானவை என நான் கருதுகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad