அரசியல் பிரச்சாரங்களை நிறுத்திவிட்டு கொரானோ தொற்று தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வை வழங்க சகலரும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் முன்வர வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஹரீஸ் அழைப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, March 20, 2020

அரசியல் பிரச்சாரங்களை நிறுத்திவிட்டு கொரானோ தொற்று தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வை வழங்க சகலரும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் முன்வர வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஹரீஸ் அழைப்பு

(எம்.என்.எம்.அப்ராஸ்)

அரசியல் பிரச்சாரங்களை நிறுத்திவிட்டு கொரானோ தொற்று நோயின் தாக்கம் சம்பந்தமாக மக்களுக்கு விழிப்புணர்வை வழங்க சகலரும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் முன்வர வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

கொரானோ தொற்று தொடர்பாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் கல்முனையிலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று (20) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தேர்தல் காலம் என்பதால் சமூக வலைத்தளங்களில் பொதுவாக அரசியல் சார் விடயங்களே எழுதப்படுகின்றது.

எனவே நான் ஓர் அரசியல் கட்சி பிரதிநிதியாக இருந்தாலும் சகல கட்சி பிரதிநிதிகள் மற்றும் ஆதரவாளர்கள் ஏனைய சமூக வலைத்தளங்களை பாவிப்போரிடம் வேண்டிக் கொள்வது தயவுசெய்து நாங்கள் எங்களது அரசியல் பிரச்சாரங்களை நிறுத்திவிட்டு கோரானோ தொற்று நோயின் தாக்கம் சம்பந்தமாக விழிப்புணர்வு ஆலோசனைகளை மக்களுக்கு வழங்க முன்வர வேண்டும்.

இத்தொற்று வைரசை வைத்து அரசியல் பிரச்சாரம் செய்வதை தவிரத்து விட்டு பொதுமக்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் நான் அரசாங்கத்திடம் வேண்டுகோள் ஒன்றை விடுகிறேன் நோய்த் தொற்று உள்ளானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் வரை அன்றாடம் ஜீவனோபாயம் செய்யும் மற்றும் வறுமை கோட்டில் வாழும் மக்களுக்கும் தேவையான உலர் உணவுப் போதிகளை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் .

நோய்த் தொற்றுக்கு உள்ளான ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் மக்களுக்கு அன்றாட உணவு பொருட்களை வழங்கி வருகின்றது.என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன். மக்கள் இத்தொற்று நோய் தொடர்பான விழிப்புணர்வை உரிய முறையில் மக்கள் பின்பற்ற வேண்டும். 

அம்பாரை மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மத்திய சுகாதார அமைச்சு சில தொண்டு நிறுவனங்கள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இவ்விடயத்தில் நான் முழுமையாக ஒத்துழைப்பு வழங்க எப்பொதும்
தாயார் நிலையில் உள்ளேன் என்றார்.

No comments:

Post a Comment