சூழலியல் தொழில் வல்லுனர் நிறுவக கூட்டிணைத்தல் சட்டமூலத்தில் கையொப்பமிட்டார் சபாநாயகர் - News View

Breaking

Post Top Ad

Monday, March 2, 2020

சூழலியல் தொழில் வல்லுனர் நிறுவக கூட்டிணைத்தல் சட்டமூலத்தில் கையொப்பமிட்டார் சபாநாயகர்

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இலங்கை சூழல் சார் உயர் தொழிலர்கள் நிறுவகம் (கூட்டிணைத்தல்) தனி நபர் சட்டமூலத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய கைச்சாத்திட்டார்.

பாராளுமன்றத்தின் 74ஆவது நிலையியற் கட்டளைக்கு அமைய சபாநாயகர் தனது கையொப்பத்தை இட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா இலங்கை சூழல் சார் உயர் தொழிலர்கள் நிறுவகம் (கூட்டிணைத்தல்) சட்டமூலத்தை தனிநபர் சட்டமூலமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்ததுடன், இது சபையில் நிறைவேற்றப்பட்டிருந்தது.

சூழல் சார் உயர் தொழிலர்களின் மரியாதை மற்றும் மதிப்பை மேம்படுத்தல், பொதுமக்கள் மத்தியில் சூழல் சார் அறிவைப் பரப்புதல். சூழல் சார் பிரச்சினைகள் பற்றிய விஞ்ஞான ரீதியிலான தெளிவை மேம்படுத்தும் நோக்கில் துறைசார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்வதை ஊக்குவித்தல், சூழல் மற்றும் அபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகளை கலந்துரையாடுவதற்கான பலமான மேடையொன்றை வழங்குவதை இது நோக்காகக் கொண்டிருக்கும்.

அத்துடன், அரசாங்கம் அல்லது ஏதேனும் மாகாண சபையின் அமைச்சு அல்லது திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட எழுத்திலான கோரிக்கைக்கு அமைய, இயற்கை மற்றும் பௌதீக சூழலைப் பாதுகாத்தல் மேம்படுத்தல், சுற்றாடல் விஞ்ஞானிகள் மற்றும சுற்றாடல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பயிற்சிகளை மேற்கொள்வதற்கான வசதியை மேற்கொள்ள, சம்பந்தப்பட்ட அமைச்சு அல்லது திணைக்களம் அல்லது மாகாண சபைக்கு உதவுதல் என்பவற்றையும் இச்சட்டமூலத்தின் மூலம் மேற்கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad