கோறளைப்பற்று மேற்கு, பிரதேச செயலாளர் பிரவில் ஊரடங்கு சட்டத்தின் போது வியாபார நடவடிக்கைகளுக்கு அனுமதி - News View

Breaking

Post Top Ad

Tuesday, March 24, 2020

கோறளைப்பற்று மேற்கு, பிரதேச செயலாளர் பிரவில் ஊரடங்கு சட்டத்தின் போது வியாபார நடவடிக்கைகளுக்கு அனுமதி

எஸ்.எம்.எம்.முர்ஷித்

நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோனா நோயிலிருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தினால் மக்களின் இயல்பு வாழ்வு எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்று ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைய ஊரடங்கு சட்டத்தின் போது நடமாடும் வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி, கோறளைப்பற்று மேற்கு, பிரதேச செயலாளர் பிரவில் உள்ள மறக்கரி மீன் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் வியாபாரிளுக்கான அனுமதி இன்று (24.03.2020 செவ்வாய்க்கிழமை பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூதினால் வழங்கி வைக்கப்பட்டது.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அறுபது பேருக்கு இன்றைய தினம் அனுமதி வழங்கப்பட்டதாக பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad