ரஸ்யாவிலும் வேகமாக பரவத் தொடங்கியது வைரஸ் - உணவு விடுதிகள் கடைகளை மூடுமாறு ஜனாதிபதி உத்தரவு - News View

About Us

About Us

Breaking

Thursday, March 26, 2020

ரஸ்யாவிலும் வேகமாக பரவத் தொடங்கியது வைரஸ் - உணவு விடுதிகள் கடைகளை மூடுமாறு ஜனாதிபதி உத்தரவு

ரஸ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் வைரசினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து மொஸ்கோ அனைத்து உணவு விடுதிகள் கடைகள் மதுபானசாலைகள் உட்பட பொதுமக்கள் கூடும் இடங்கள் அனைத்தையும் 28 ஆம் திகதி முதல் 05 ஆம் திகதி வரை மூடும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. 

ரஸ்யாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 186 கொரோனா வைரஸ் நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 136 பேர் மொஸ்கோவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இதனை தொடர்ந்து ரஸ்யாவில் அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 840 ஆக அதிகரித்துள்ளது. இதில் மூவர் உயிரிழந்துள்ளனர். 

இதனை தொடர்ந்து ரஸ்யா ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கடுமையான நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 27 ஆம் திகதி முதல் அனைத்து சர்வதேச விமான சேவைகளுக்கும் புட்டின் தடை விதித்துள்ளார்.

No comments:

Post a Comment