வசிப்பிடங்களுக்கு செல்ல மேலதிக ரயில்கள், பஸ்கள் சேவையில் - News View

Breaking

Post Top Ad

Friday, March 20, 2020

வசிப்பிடங்களுக்கு செல்ல மேலதிக ரயில்கள், பஸ்கள் சேவையில்

இன்று (20) பிற்பகல் 6.00 மணிக்குப் பின்னர் சகல ரயில் சேவைகளும் நிறுத்தப்படுவதாக, போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

அதற்கமைய, தத்தமது வசிப்பிடங்களுக்குச் செல்லும் மக்களுக்கு வசதியாக கொழும்பு புறக்கோட்டையிலிருந்து மேலதிக பஸ்கள் மற்றும் ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளும் இன்று (20) பிற்பகல் 6.00 மணி வரை திறந்திருக்கும் என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad