கொரோனா வைரஸ் : கண்ணீருடன் முழங்காலிட்டு மன்னிப்பு கோரி கெஞ்சிய தென்கொரியாவின் மதத் தலைவர் - News View

Breaking

Post Top Ad

Monday, March 2, 2020

கொரோனா வைரஸ் : கண்ணீருடன் முழங்காலிட்டு மன்னிப்பு கோரி கெஞ்சிய தென்கொரியாவின் மதத் தலைவர்

தென் கொரியாவில் கொரோனா வைரஸ் உருவான பிரதான மையப்பகுதியான வழிப்பாட்டுத்தலத்தின் மதத் தலைவர் அந்நாட்டு மக்களிடமும் அரசிடமும் முழங்காலிட்டு மன்னிப்பு கோரி கெஞ்சியுள்ளார்.

தென் கொரியாவின் ஷின்சியோன்ஜி தேவாலயத்தில் முதல் வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டதை தொடர்ந்து பல்லாயிரக்கணக்கானவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இதுவரை சுமார் 2500 மேற்பட்டோர் கொவிட்-19 நோயாளர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த தேவாலயத்தின் 88 வயதான மதத்தலைவரான மேசியா லீ மேன்-ஹீயின் மீது அதிகாரிகள் இவர் ஒத்துழைக்கத் தவறியமை காரணமா? என்ற கோணத்தில் அதிகாரிகள் கொலை குற்றம் சுமத்த முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து, குறித்த மதத்தலைவர், கபியோங்கில் நிருபர்கள் முன்பாக தலை குனிந்து அரசிடமும் நாட்டு மக்களிடமும் இரண்டு முறை முழங்காலிட்டு மன்னிப்பு கோரி கெஞ்சியுள்ளார்.
குறித்த தேவாலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பில், மேசியா லீ மேன்-ஹீ அரசாங்கத்தின் மன்னிப்புக்காக மன்றாடியபோது, "உறுப்பினர்கள் சார்பாக எனது உண்மையான மன்னிப்பை மக்களுக்கு வழங்க விரும்புகிறேன்," என்று லீ தெரிவித்துள்ளார்.

'இது வேண்டுமென்றே செய்யப்படவில்லை என்றாலும், இதனால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்,'

'நாங்கள் எங்களால் முடிந்த வரை முயற்சி செய்தோம், ஆனால் அதையெல்லாம் தடுக்க முடியவில்லை. நான் மக்களின் மன்னிப்பை நாடுகிறேன்.

'அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு நான் மிகவும் நன்றி கூறுகிறேன். நான் அரசாங்கத்தின் மன்னிப்பையும் நாடுகிறேன்.'

மேலும் தமது குழு 'அரசாங்கத்துடன் தீவிரமாக ஒத்துழைக்கிறது' என்று லீ வலியுறுத்தியுள்ளார்.

'நாங்கள் எங்களால் முடிந்ததைச் செய்வோம், மனித மற்றும் பொருள் ஆதரவைத் தவிர்ப்பதில்லை' என்று அவர் மேலும் கண்ணீருடன் கூறியுள்ளார்.

தென் கொரியாவில் கோரோனா நோய் தொற்றுக்கு உள்ளான 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குறித்த தேவாலயத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர். 

மேலும் ஷின்சியோன்ஜின் தேவாலயத்துடன் தொடர்புடைய மேலும் 260,000 பேர் வரை வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதால் கோரோனா நோயாளர் எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad