அத்தியாவசிய, உற்பத்திப் பொருட்களை எடுத்து வரவும், எடுத்துச் செல்லவும் அனுமதி - யாழ். மாவட்டச் செயலாளர் - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 25, 2020

அத்தியாவசிய, உற்பத்திப் பொருட்களை எடுத்து வரவும், எடுத்துச் செல்லவும் அனுமதி - யாழ். மாவட்டச் செயலாளர்

கொழும்பு உள்பட வெளி மாவட்டங்களிலிருந்து அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏற்றி வரவும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு உள்ளூர் உற்பத்திப் பொருள்களை எடுத்துச் செல்லவும் வாகனங்களுக்கு வழி அனுமதி வழங்கப்படுவதாக மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் அறிவித்துள்ளார். 

எனவே சம்பந்தப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் சாரதி மற்றும் உதவியாளரின் பெயர்களைப் பதிவு செய்யுமாறும் அவர் கேட்டுள்ளார். 

இது தொடர்பில் மாவட்டச் செயலாளர் அனுப்பி வைத்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது யாழ்ப்பாணம் மாவட்டத்துக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொழும்பு உட்பட வெளி மாவட்டங்களிலிருந்து கொள்வனவு செய்து எடுத்து வரவும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வெளி மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்வதற்குமான வாகன வழி அனுமதி வழங்கப்படுகிறது. 

வாகனத்தின் சாரதி, உதவியாளரது பெயர், தேசிய அடையாள அட்டை, வாகன இலக்கம், யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு எடுத்து வருகின்ற பொருட்கள் ஆகிய விவரத்துடன் உரிய பிரதேச செயலாளரது பரிந்துரையைப் பெற்று அலுவலக நாட்களில் காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணி வரை மாவட்டச் செயலகத்தின் பரிந்துரையைப் பெற்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் யாழ்ப்பாணம் இராணுவ சிவில் பாதுகாப்பு அதிகாரியின் அனுமதியைப் பெற்றுக் கொள்ள முடியும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad