தீவிரமயமாக்கல், மதவாத தீவிரப்போக்கு ஏனைய எதிர்கால அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது - பாதுகாப்பு செயலாளர் - News View

About Us

About Us

Breaking

Monday, March 2, 2020

தீவிரமயமாக்கல், மதவாத தீவிரப்போக்கு ஏனைய எதிர்கால அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது - பாதுகாப்பு செயலாளர்

தீவிரமயமாக்கல், பயங்கரவாதம் மீள் எழுச்சி, பிரிவினைவாதம், மத தீவிரவாதம், திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் உள்ளக வேலைநிறுத்தங்கள் என்பன பிரதான சவால்களாக காணப்படுவதாக தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அரசாங்கம் தனது முழுக்கவனத்தையும் செலுத்திவருவதாகவும் தெரிவித்தார்.

"அண்மைய காலங்களில் இவ்வகையான தீவிரமயமாக்கல்களை எதிர்கொள்வதில் இலங்கை அரசு வெற்றிகரமாக செயற்பட்டதுடன், தற்போதைய போக்கை பொறுத்தவரை, உயிர்த்த ஞாயிறு தாக்குதலானது அரசியல்-மத தீவிரமயமாக்கல் சம்பந்தப்பட்ட அனைத்து பிரிவுகளுக்கும் பிரதான புள்ளியாக அமைந்திருக்க வேண்டும்,” என தெரிவித்த செயலாளர், தற்போதுள்ள நாடுகடந்த தீவிரவாதம் நிச்சயமாக உள்நாட்டு மத தீவிரவாதத்துடன் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.” என்றும் அவர் தெரிவித்தார்,
கடின உழைப்பின் மூலம் பெற்றுக்கொண்ட சமாதானத்தை குழப்பும் வகையில் குறிப்பிட்ட சில சமூக விரோத மற்றும் இலங்கைக்கு எதிரான அமைப்புக்கள் 10 வருடங்களுக்குப் பின்னர், இனங்களுக்கிடையே பிளவுகளையும் அவநம்பிக்கை உணர்வையும் ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதாவும், பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்

அண்மையில் கொழும்பில் உள்ள இலங்கை பவுண்டேஷன் நிறுவனத்தில் நடைபெற்ற சமூக ஊடக நிபுணத்துவ அமைப்பின் தொழில்துறை நிபுணர்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்காலத்தில் பயங்கரவாதம் மீள் எழுச்சியானது ஒரு அச்சுறுத்தலாக கணப்படாதபோதும் அரசு அதனை குறைக்க சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருவதாகவும் மேலும் அவர் தெரிவித்தார்.  
நாட்டின் உள்ளேயும் மற்றும் வெளிநாடுகளிலும் உள்ள புலிகள் சார்பு அமைப்புக்களால் மேற்கொள்ளப்படும் முன்னெடுப்புக்கள் இலங்கையின் ஸ்திரத்தன்மைக்கு எவ்விதத்திலும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தாது எனவும், அனைத்து இன, மத மற்றும் கலாச்சார நிறுவனங்களும் சம அந்தஸ்துடன் மதிக்கப்படுவாதாகவும், எனவே நாட்டின் தற்போதைய சூழலில் பிரிவினைவாதத்திற்கான மோதல்களை எதிர்பார்க்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

கடின உழைப்பின் மூலம் பெற்றுக்கொண்ட சமாதானத்தை குழப்பும் வகையில் குறிப்பிட்ட சில சமூக விரோத மற்றும் இலங்கைக்கு எதிரான அமைப்புக்கள் இனங்களுக்கிடையே பிளவுகளையும் அவநம்பிக்கை உணர்வையும் ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதாவும், இச்செயற்பாடுகள் நிச்சயமாக உள்நாட்டு மத தீவிரவாதத்துடன் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.

No comments:

Post a Comment