கொரோனாவுக்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கைகளை தவறாக விமர்சிக்க வேண்டாம் - பிரதமர் மஹிந்த - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 25, 2020

கொரோனாவுக்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கைகளை தவறாக விமர்சிக்க வேண்டாம் - பிரதமர் மஹிந்த

(இராஜதுரை ஹஷான்) 

கொரோனா வைரஸ் பரவலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் தொடர்பில் சமூக வலைத்தளங்கள் ஊடாக தவறான விமர்சனங்களை முன்னெடுக்க வேண்டாம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, முழு நாட்டு மக்களும் நெருக்கடிக்குள்ளாகியுள்ள நிலையில் ஒரு தரப்பினர் அரசியல் தேவைகளை கருத்திற்கொண்டு செயற்படுவது கண்டிக்கத்தக்கது. 

கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை பல்வேறு வழிமுறைகள் ஊடாக முன்னெடுத்து வருகின்றது. 

முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம் தொடர்பில் ஒரு தரப்பினர் அரசியல் நோக்கங்களை சமூக வலைத்தளங்கள் ஊடாக முன்னெடுத்து வருகின்றார்கள். இவ்வாறான செயல்பாடுகள் வன்மையாக கண்டிக்கத்தக்கன. 

உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

தற்போது எழுந்துள்ள சவால்களை வெற்றி கொள்ள அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளை பலவீனப்படுத்தாமல், சவால்களை எதிர்கொள்ள அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad