டெங்கு நோயை கட்டுப்படுத்த வொல்பச்சியா பக்டீரியாக்களை பயன்படுத்தும் பரீட்சார்த்த முறை ஆரம்பம் - News View

About Us

About Us

Breaking

Monday, March 2, 2020

டெங்கு நோயை கட்டுப்படுத்த வொல்பச்சியா பக்டீரியாக்களை பயன்படுத்தும் பரீட்சார்த்த முறை ஆரம்பம்

இலங்கையில் டெங்கு நோயை கட்டுப்படுத்த வொல்பச்சியா பக்டீரியாக்களை கொண்டுள்ள கொசுக்களை பயன்படுத்தும் பரீட்சார்த்த முறை நேற்று ஆரம்பமாகியது.

நுகேகொடை ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் இந்த நிகழ்ச்சி இடம்பெற்றது.

இந்த பரீட்சார்த்த திட்டம் முதலில் நுகேகொடை, மட்டக்குளி மற்றும் கொட்டாஞ்சேனை ஆகிய பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்படும். அதன் பின்னரே மற்றைய இடங்களுக்கு விஸ்தரிக்கப்படவுள்ளது. வொல்பச்சியா திட்டம் அவுஸ்திரேலியா உள்ளிட்ட 13 நாடுகளில் குறிப்பிடத்தக்க வெற்றியடைந்துள்ளது.

பரீட்சார்த்த திட்ட ஆரம்பத்தின்போது உரையாற்றிய அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொல்பி, சுகாதார அமைச்சுடன் இணைந்து இத்திட்டத்தில் பங்குபற்றுவதில் அவுஸ்திரேலியா மகிழ்ச்சியடைவதாக கூறினார்.

வொல் பச்சியாமுறை 2011 இல் அவுஸ்திரேலியாவின் கெயார்ன்ஸ் நகரில் அறிமுகப்படுத்தப்பட்டது. அங்கு இம் முறைபெரும் வெற்றியளித்துள்ளது. அதன் பின் இங்கு டெங்கு பரவல் கட்டுப்படுத்தப்பட்டது.

இதேநேரம் 1980 களில் இருந்து டெங்கு நோய் இலங்கையில் தீவிரமாக பரவி வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜயசிங்க கூறுகிறார்.

ஒவ்வொரு ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கையில் டெங்குவின் தீவிரம் அதிகரிப்பதாகவும், எனினும் மரண விகிதம் குறைந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment