ஜனாதிபதியின் உருவப் படத்தை காட்சிப்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறு வேண்டுகோள்! - News View

Breaking

Post Top Ad

Sunday, March 1, 2020

ஜனாதிபதியின் உருவப் படத்தை காட்சிப்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறு வேண்டுகோள்!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் புகைப்படம் அல்லது கையினால் வரையப்பட்ட அவரின் உருவப்படங்களை பொது இடங்களில் காட்சிப்படுத்துவதனை தவிர்க்குமாறு குறித்த தரப்பினரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் வரையப்பட்ட உருவப்படம், ஓவியங்கள் (Portrait) மற்றும் புகைப்படங்களை கண்காணிப்பின்றி பாதையோரங்களில், பொது விழாக்கள் நடைபெறும் இடங்களில் காட்சிப்படுத்தப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.

தமது உருவத்தை வரையும் நபர்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஜனாதிபதி, அதேவேளை அவ்வாறு செய்வதினை தவிர்த்துக் கொள்ளுமாறு குறித்த தரப்பினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தனிநபர் பிரபல்யத்தை தான் விரும்பவில்லையென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad