வைரஸ் எவ்வேளையிலும் தாக்கலாம் எங்களை விடுதலை செய்யுங்கள்- அவுஸ்திரேலிய முகாமிலுள்ள குடியேற்றவாசிகள் பரிதாப வேண்டுகோள் - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 25, 2020

வைரஸ் எவ்வேளையிலும் தாக்கலாம் எங்களை விடுதலை செய்யுங்கள்- அவுஸ்திரேலிய முகாமிலுள்ள குடியேற்றவாசிகள் பரிதாப வேண்டுகோள்

அவுஸ்திரேலியாவின் விலாவூட் தடுப்பு முகாமில் உள்ள புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்களை விடுதலை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

அவுஸ்திரேலியா பிரதமர் ஸ்கொட் மொறிசனிற்கு நூற்றிற்கும் மேற்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர். 

கொரோனா வைரஸ் பரவிவரும் இவ்வேளையில் தங்களை விடுதலை செய்யுமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கொரோனா எந்த தருணத்திலும் எங்கள் சூழலிற்குள் நுழையலாம் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

நாங்கள் இலகுவாக பாதிக்கப்படக் கூடியவர்களாக உள்ளோம், மோசமாக நோய் வாய்படக் கூடிய நிலையில் உள்ளோம் என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ள அவர்கள் மரணம் கூட ஏற்படலாம் என தெரிவித்துள்ளனர். 

அரசாங்கம் எங்களை எங்கள் குடும்பத்தவர்கள் மத்தியில் விடுதலை செய்த பின்னர் கடுமையாக கண்காணிக்கலாம் என அவுஸ்திரேலிய பிரதமரிற்கான கடிதத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குடியேற்றவாசிகள் தெரிவித்துள்ளனர். 

தடுப்பு முகாமில் பெருமளவானவர்கள் காணப்படுவதால் எங்களால் சமூக விலக்கள் நடைமுறைகளை பின்பற்ற முடியவில்லை என விலாவூட் தடுப்பு முகாமில் உள்ள ஒருவர் தெரிவித்துள்ளார். முகாமின் பணியாளர்கள் பாதுகாப்பு கவசங்களை அணிவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad