ஊரடங்கு உத்தரவின் போது முல்லைத்தீவில் அலைமோதிய மக்கள் கூடடம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 24, 2020

ஊரடங்கு உத்தரவின் போது முல்லைத்தீவில் அலைமோதிய மக்கள் கூடடம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்றைய தினம் காலை 6 மணி முதல் ஊரடங்கு தள்ளப்பட்டபோது அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக முல்லைத்தீவில் மக்கள் அதிகளவில் கூடுவதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

குறிப்பாக பலசரக்கு கடைகள் மற்றும் மரக்கறி சந்தைகள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள், மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கான இடங்களிலே அதிகளவான மக்கள் ஒன்று கூடி இருப்பதை காணக்கூடியதாக இருந்தது.

குறிப்பாக பொலிசார், இராணுவத்தினர் விசேட அதிரடிப் படையினர் இணைந்து மக்கள் ஒன்று கூடும் இடங்களில் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

குறிப்பாக வருகை தரும் மக்களுக்கிடையிலான இடைவெளிகளை ஏற்படுத்தி பல்வேறு சுகாதார ஆலோசனைகளுக்கு அமைவாக அவர்களுடைய கடமைகளை ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்ற போதும் மக்கள் கூட்டம் மிக அதிகமான அளவிலே வருகை தருவதால் பல்வேறு இடர்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.
எதிர்வரும் வரை ஊரடங்கு உத்தரவு இருக்கின்ற நிலைமையில் அதற்கான பொருட்களை வாங்குவதற்காக மக்கள் முண்டியடித்துக் கொண்டு இருந்ததை காணக் கூடியதாக இருந்தது.

இந்நிலையில் இன்றைய தினம் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்வு நிலை இருந்த போதும் அரசாங்கத்தினால் அந்த உத்தரவு பிற்பகல் 2 மணி வரை தளர்த்தப்பட்டது. 

அதோடு குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசாங்கத்தினால் நேற்றையதினம் அறிவிக்கப்பட்ட சலுகைகளின் அடிப்படையில் சமுர்த்தி வங்கியில் கொடுப்பனவு வழங்கப்பட்டது.

இந்நிலையில் சமுர்த்தி வங்கியில் அதிகளவான மக்கள் கூடுகின்ற நிலையில் இந்த விடயம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு ஊடகவியலாளர்கள் கொண்டு சென்றதன் அடிப்படையில் குறித்த பணத்தை அவர்களுடைய வீடுகளில் கொண்டு சென்று வழங்குவதற்கான மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அவர் அறிவித்திருக்கிறார்.

முல்லைத்தீவு நிருபர் தவசீலன்

No comments:

Post a Comment