கொரோனா அச்சத்தால் வீடியோ மாநாடாக நடைபெறவுள்ள ஜி-7 உச்சி மாநாடு - News View

Breaking

Post Top Ad

Friday, March 20, 2020

கொரோனா அச்சத்தால் வீடியோ மாநாடாக நடைபெறவுள்ள ஜி-7 உச்சி மாநாடு

நாற்பத்து ஆறாவது ஜி 7 (G7) உச்சி மாநாடு எதிர்வரும் ஜூன் மாதம் 10 ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திகதி வரையில் அமெரிக்காவில் நடத்தப்பட தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. 

இருந்தபோதிலும் உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்று அபாயம் காரணமாக இம்முறை ஜி-7 மாநாட்டை ஒன்றுகூடி நடத்தாது வீடியோ மாநாடு மூலமாக நடத்த அமெரிக்கா தீர்மானித்துள்ளது. 

அமெரிக்காவில் சகல மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ள நிலையில் தற்போது வரையில் 200 பேர் கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் கனடா, பிரான்ஸ், ஜெர்மன், இத்தாலி, ஜப்பான், ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அமைப்புகளுக்கும் இந்த கொரோனா தொற்று நோய் பாரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த தீர்மானம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad