ஊரடங்கு அமுல்படுத்தியதிலிருந்து அதனை மீறிய 338 பேர் கைது - News View

About Us

About Us

Breaking

Sunday, March 22, 2020

ஊரடங்கு அமுல்படுத்தியதிலிருந்து அதனை மீறிய 338 பேர் கைது

- மைதானத்தில் மதுபானம் அருந்திக் கொண்டிருந்தோர்
- ஊரடங்கின்போது உணவகம் திறந்திருந்தவர்
- வீதிகளில் வாகனங்களில் பயணித்தோர்
- மது அருந்தி முறையற்ற வகையில் வீதியில் சென்றவர்கள்
- வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள்

ஊரடங்கு அமுலில் இருக்கின்ற வேளையில் அதனை மீறும் வகையில் நடந்து கொண்ட 338 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை (20) மாலை 6.00 மணி முதல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது முதல், இன்று (22) காலை 9.00 மணி வரை 338 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதில், மைதானத்தில் மதுபானம் அருந்திக் கொண்டிருந்தோர், ஊரடங்கின்போது உணவகம் திறந்திருந்தவர், வீதிகளில் வாகனங்களில் பயணித்தோர், மது அருந்தி முறையற்ற வகையில் வீதியில் சென்றவர்கள், வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் அந்தந்த பொலிஸ் நிலையங்கள் மூலம் சட்ட எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாடு முழுவதும் ஒவ்வொரு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளிலும் அந்தந்த பொலிஸ் நிலையத்தின் மூலம், ஒலி பெருக்கிகள் மூலம் பொதுமக்களை வெளியில் வர வேண்டாம் என பொலிஸார் அறிவித்து வருவதோடு, ஊரடங்கு சட்டத்தை மீறும் நபர்கள் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment