கொரோனா வைரசால் திணறும் உலக நாடுகள்- 24 ஆயிரத்தை தாண்டியது பலி எண்ணிக்கை - News View

About Us

About Us

Breaking

Thursday, March 26, 2020

கொரோனா வைரசால் திணறும் உலக நாடுகள்- 24 ஆயிரத்தை தாண்டியது பலி எண்ணிக்கை

கொரோனா வைரசால் பலியானோரின் எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டி உள்ளது. ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 942 பேர் குணமடைந்துள்ளனர்.

உயிர்க்கொல்லி வைரசான கொரோனா வைரசை ஒழிக்க முடியாமல் உலக நாடுகள் சிக்கி திணறி வருகின்றன. உலகின் 199 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. 

தடுப்பு மருந்துகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 

இன்று காலை நிலவரப்படி, உலகம் முழுவதும் இதுவரை 5 லட்சத்து 31 ஆயிரத்து 804 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 24 ஆயிரத்து 73 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும், 3 லட்சத்து 83 ஆயிரத்து 789 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 19 ஆயிரத்து 357 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 942 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனாவால் அதிக அளவில் உயிரிழப்பை சந்தித்த நாடுகள் வருமாறு

இத்தாலி - 8,215
ஸ்பெயின் - 4,365
சீனா - 3,292
ஈரான் - 2,234
பிரான்ஸ் - 1,696
அமெரிக்கா - 1,295
பிரிட்டன் - 578
நெதர்லாந்து - 434
ஜெர்மனி - 267
பெல்ஜியம் - 220
சுவிட்சர்லாந்து - 192
தென்கொரியா - 131
இந்தோனேசியா - 78
பிரேசில் - 77
ஸ்வீடன் - 77
துருக்கி - 75
போர்ச்சுக்கல் - 60
ஆஸ்திரியா - 49
ஜப்பான் - 47
பிலிப்பைன்ஸ் - 45
டென்மார்க் - 41
கனடா - 39
ஈராக் - 36
ஈக்வடார் - 34
அல்ஜீரியா - 25
எகிப்து - 24

No comments:

Post a Comment