இத்தாலியை தொடர்ந்து பிரான்ஸ் - கொரோனா 24 மணி நேரத்தில் 108 பேர் பலி - News View

Breaking

Post Top Ad

Friday, March 20, 2020

இத்தாலியை தொடர்ந்து பிரான்ஸ் - கொரோனா 24 மணி நேரத்தில் 108 பேர் பலி

பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஒரே நாளில் 108 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் பலி எண்ணிக்கை 372 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் இதுவரை 2 லட்சத்து 45 ஆயிரத்து 834 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் 10 ஆயிரத்து 47 பேர் உயிரிழந்துள்ளனர். 88 ஆயிரத்து 441 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 1 லட்சத்து 47 ஆயிரத்து 400 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஐரோப்பியா நாடான இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 3 ஆயிரத்து 405 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலி, ஸ்பெயினுக்கு அடுத்தப்படியாக பிரான்ஸ் நாட்டில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடிவருகிறது.

பிரான்ஸ் நாட்டில் கொரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 108 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 372 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் 10 ஆயிரத்து 995 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad