ஊரடங்கு சட்டத்தை மீறிய 09 பேர் வாழைச்சேனையில் கைது - News View

Breaking

Post Top Ad

Saturday, March 21, 2020

ஊரடங்கு சட்டத்தை மீறிய 09 பேர் வாழைச்சேனையில் கைது

எஸ்.எம்.எம்.முர்ஷித்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட ஒன்பது பேரை பொலிசார் கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்சய பெரமுன தெரிவித்தார்.

நாட்டில் பரவிவரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசாங்கம் கடந்த வெள்ளிக்கிழமை (20.03.2020) தொடக்கம் எதிர்வரும் திங்கட்கிழமை (23.03.2020) வரை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கு சட்டத்தை மீறிய கடந்த 24 மணித்தியாலங்களில் (இன்று சனிக்கிழமை மாலை வரை) ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அதில் ஒருவர் மது போதையில் பயணம் செய்த வேளையில் மோட்டார் சைக்கிளுடன் கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்சய பெரமுன தெரிவித்தார்.

குறித்த பொலிஸ் பிரிவில் பொதுமக்கள் நடமாடுவதை தவிர்த்து கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் பூரண ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்றும் மீறும் பட்சத்தில் கைது செய்யப்பட்டு நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர் என்றும் பொலிஸார் ஒலி பெருக்கி மூலம் தனது பிரதேசத்தில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இதேவேளை நாடு பூராவும் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பாட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

Post Bottom Ad