அம்பாறை சடயந்தலாவை பகுதியில் யானை கூட்டம் ஆக்கிரமிப்பு - News View

Breaking

Post Top Ad

Saturday, February 29, 2020

அம்பாறை சடயந்தலாவை பகுதியில் யானை கூட்டம் ஆக்கிரமிப்பு

பாறுக் ஷிஹான்

யானை கூட்டம் ஒன்று அம்பாறை சடயந்தலாவை பகுதியை ஆக்கிரமிப்பு செய்து வருகின்றது.

திடிரென அம்பாறை மாவட்டத்தின் உகணை பகுதியை ஊடறுத்து செல்லும் சடயந்தலாவை பகுதியில் உள்ள அறுவடை செய்யப்பட்ட வயல் நிலங்களை நோக்கி சுமார் 23 யானைகள் வருகை தந்துள்ளன.

சனிக்கிழமை (29) மாலை 5.30 மணியளவில் அப்பகுதிக்கு வந்த யானைக் கூட்டத்தை மக்கள் பார்வையிட்டு வருகின்றனர். 

இவ்வாறு வயல்வெளிகளை நோக்கி வருகை தந்துள்ள யானைகள் ஊருக்குள் பிரவேசிக்க முடியாத வகையில் பார்வையாளர்களாக உள்ள மக்கள் சத்தங்களை எழுப்பிய வண்ணம் உள்ளனர்.

இதனால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் பொதுமக்கள் அவ்விடத்தில் அதிகளவாக குவிந்துள்ளனர். 

மேலும் இப் பிரதேசத்தில் தினந்தோறும் வயல்வெளிகளில் உள்ள வைக்கோல்களுக்கு தீ வைப்பதனாலும் காட்டில் உள்ள யானைகள் வெளிவந்த நிலையில் அருகில் உள்ள பொதுமக்களின் உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad