அரசாங்கத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் வகையில் எமது செயற்பாடுகள் அமையும் - அமைச்சர் தினேஷ் - News View

Breaking

Post Top Ad

Saturday, February 29, 2020

அரசாங்கத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் வகையில் எமது செயற்பாடுகள் அமையும் - அமைச்சர் தினேஷ்

பேண்தகு அபிவிருத்தி இலக்குகள் மற்றும் ஐ.நா. மற்றும் அதன் முகாமைகளின் உதவியுடன் தொடர்ந்து செயற்படும் எமது அரசாங்கத்தின் கடப்பாடுகளுடன் தொடர்புபட்ட கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் வகையில் எமது செயற்பாடுகள் அமையும் என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஐ.நா மனிதவுரிமை பேரவையில் தெரிவித்தார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானம் தொடர்பான நிலைப்பாட்டை இலங்கை அரசாங்கம் நேற்று முன்வைத்தது. 2019மார்ச் 40/1 தீர்மானத்தின் இணை அனுசரணையில் இருந்து விலகிக் கொள்வது பற்றி விசேடமாக குறிப்பிடப்பட்டது. 

அத்துடன் அதற்கு முன்னரான 2015 ஒக்டோபரின் 30/1 தீர்மானம் மற்றும் 2017 மார்ச் மாதத்தின் 34/1 ஆகிய தீர்மானங்களும் அதில் உள்ளடங்கியிருந்தன.

தொடர்ந்து அமைச்சர் உரையாற்றுகையில், மேற்படி தீர்மானத்தின் இணை அனுசரணையில் இருந்து விலகிக் கொள்ளும் அதேநேரம் எமது அரசியலமைப்பின் சட்டவரைவுக்குட்பட்ட வகையில் உள்ளூர் விசாரணை ஆணைக்குழு ஊடாக பேண்தகு சமாதானம் மற்றும் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை எட்டும் எமது கடப்பாடுள்ளது.

இதற்காக பேண்தகு அபிவிருத்தி இலக்குகள் மற்றும் ஐ.நா. மற்றும் அதன் முகாமைகளின் உதவியுடன் தொடர்ந்து செயற்படும் எமது அரசாங்கத்தின் கடப்பாடுகளுடன் தொடர்புபட்ட கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் வகையில் எமது செயற்பாடுகள் அமையும்.

40/1 தீர்மானத்தின் இணை அனுசரணையில் இருந்து விலகிக் கொள்ளும் இலங்கையின் தீர்மானம் தொடர்பாக அதிருப்தியடைந்தவர்களுக்கு நாம் கூறிக்கொள்வது என்னவென்றால் எமது பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை பேண்தகு சமாதானம் மற்றும் நல்லிணக்கம் வரை கொண்டு செல்லும் எமது அரசாங்கத்தின் மீள் உறுதியை இந்த பேரவைக்கு வழங்குகிறோம் என்பதாகும்.

40/1 தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 1 வருட காலமும் முதலாவது 30/1 தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 4 -1/2 வருட காலமும் சென்றுள்ள நிலையில் எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 100 நாட்களுக்கு மேல் சிறிது காலமே சென்றுள்ளது.

இந்த பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் ஒரு வருட காலத்துக்கு முன் நடைபெற்ற போது எமது முன்னாள் வெளிநாட்டமைச்சர் இலங்கையின் நிலைப்பாட்டை இங்கு விளக்கினார். 30/1 தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் உள்ள அரசியலமைப்பு சட்ட மற்றும் சமூக அரசியல் சவால்கள் பற்றி அவர் தெளிவாக விளக்கியிருந்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad