ஈரான் நாட்டின் துணை ஜனாதிபதிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு - News View

Breaking

Post Top Ad

Thursday, February 27, 2020

ஈரான் நாட்டின் துணை ஜனாதிபதிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

ஈரான் நாட்டின் துணை ஜனாதிபதியான மசூமே எப்டகருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என அந்நாட்டு ஊடக ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் ஹுபேய் மாகாண தலைநகர் வுகானில் கடந்த டிசம்பர் இறுதியில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதன்பின், பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் என பல்வேறு நகரங்களிலும் பரவிய இந்த வைரஸ் வுகானில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. 

கொரோனா வைரஸ் சீனா மட்டுமின்றி, உலகம் முழுவதும் கடும் மிரட்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை இன்று 2,744 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், அந்நாட்டு துணை சுகாதார அமைச்சர் இராஜுக்கு நடந்த கொரோனா வைரஸ் பரிசோதனையில் அவருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், ஈரான் துணை ஜனாதிபதியான மசூமே எப்டகருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment

Post Bottom Ad