கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறைவடைகின்றன- உலக சுகாதார ஸ்தாபனம் அச்சம் - News View

About Us

About Us

Breaking

Saturday, February 22, 2020

கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறைவடைகின்றன- உலக சுகாதார ஸ்தாபனம் அச்சம்

கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறைவடைகின்றன என உலக சுகாதார ஸ்தாபனம் கவலை வெளியிட்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் இதனை தெரிவித்துள்ளார். 

சீனாவுடனோ அல்லது பாதிக்கப்பட்டவர்களுடனோ ஏனைய தொடர்பற்ற நிலையில் ஈரானில் இருவர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்தே உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் தனது அச்சத்தினை வெளியிட்டுள்ளார். 

சீனாவிற்கு வெளியே கொரோனோ வைரஸ் பாதிப்பு என்பது சிறியளவிலானதாக காணப்பட்டாலும் ஆனால் இது பரவும் விதம் கவலையளிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார். 

பிரயாணங்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புபோன்ற தெளிவான நோய் தொற்று தொடர்புகள் இல்லாதவர்கள் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளமை குறித்து கவலை கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

ஈரானில் வைரஸ் பரவியுள்ளமையும் புதிய மரணங்களும் அதிக கவலையை அளிக்கின்றன என உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். 

எனினும் சீனாவும் உலக நாடுகளும் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் காரணமாக வைரசினை கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment