உணவே மருந்து எனும் தொனிப் பொருளில் ஆரோக்கிய விழிப்புணர்வு கருத்தரங்கு - News View

Breaking

Post Top Ad

Sunday, February 23, 2020

உணவே மருந்து எனும் தொனிப் பொருளில் ஆரோக்கிய விழிப்புணர்வு கருத்தரங்கு

(எச்.எம்.எம்.பர்ஸான்)

உணவே மருந்து எனும் தொனிப் பொருளில் ஆரோக்கிய விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று சனிக்கிழமை (22) மீராவோடை அந்நூர் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை உப தவிசாளர் யூ.எல்.அஹ்மட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆண்கள், பெண்கள் என இருபாலாரும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

இந்நிகழ்வில் வளவாளராக இந்தியாவைச் சேர்ந்த என்.ராஜசேகர் கலந்து கொண்டு அனைத்து விதமான நோயிகளுக்குமான மருத்துவ ஆலோசனைகளை வழங்கியதோடு நோய்கள் வராமல் எம்மைப் பாதுகாத்துக்கொள்ள கடைப்பிடிக்க வேண்டிய பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார்.

அத்தோடு நாம் அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்கவேண்டிய உணவுப் பழக்கவழக்கங்கள் தொடர்பில் கருத்துரைகளை வழங்கியதோடு, முறையற்ற உணவு முறைகளால் அதிகம் நோய்த் தாக்கங்களுக்கு மனிதர்கள் அன்றாடம் பாதிப்புக்குள்ளாவதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad