நாட்டில் தற்பொழுது கடும் வெப்பம் - உடல் ஆரோக்கியம் தொடர்பில் வைத்தியர்கள் ஆலோசனை - News View

Breaking

Post Top Ad

Thursday, February 27, 2020

நாட்டில் தற்பொழுது கடும் வெப்பம் - உடல் ஆரோக்கியம் தொடர்பில் வைத்தியர்கள் ஆலோசனை

நாட்டில் தற்பொழுது பெரும்பாலான பிரதேசங்களில் நிலவும் அதிக வெப்ப நிலையினால் உடல் ஆரோக்கியம் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சுகாதார பிரிவு ஆலோசனைகளைத் தெரிவித்துள்ளது.

வெப்பநிலையின் காரணமாக வைத்தியசாலைக்கு வரும் நோய் நிலைமைக்கு உட்பட்டுள்ள நோயாளர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். 

தற்பொழுது நிலவும் வெப்பத்துடனான காலநிலையில் சிறுவர்கள், குழந்தைகள், வயதானோர் அதிக வெயில் வேளையில் நடமாடுவதை முடிந்தளவு தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று வைத்தியர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

பாடசாலை மாணவர்கள் நேரடியாக கடும் சூரிய ஒளியின் தாக்கத்தைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். கடுமையான சூரிய வெப்பம் காணப்படும் நேரத்தில் பாடசாலை மாணவர்கள் வெளியே செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

திறந்த வெளிகளில் பணியாற்றுவோர் காலை 11 மணி தொடக்கம் மாலை 3 மணி வரையில் பணிகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு பதிலாக சூரிய வெப்பம் குறைவான நேரங்களில் இந்த பணிகளை மேற்கொள்வது சிறந்தாகும் என்றும் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசேடமாக சிறுநீரக நோய் உள்ளவர்கள் மற்றும் மருந்து வகைகளை தொடர்ச்சியாக பயன்படுத்துவோர் இக் காலப்பகுதியில் தேக ஆரோக்கியம் தொடர்பில் தமது வைத்தியர்களை நாடுவது பொருத்தமானதாகும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad