கோறளைப்பற்று மத்தி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக சஸ்னி முஹம்மது - News View

About Us

About Us

Breaking

Sunday, February 23, 2020

கோறளைப்பற்று மத்தி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக சஸ்னி முஹம்மது

மட்டக்களப்பு மாவட்டத்தின், கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலக இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக ஜெளபர் சஸ்னி முஹம்மது தெரிவானார்.

ஜெளபர் சஸ்னி முஹம்மது 423 வாக்குகளைப்பெற்று 130 மேலதிக வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றியினை தனதாக்கிக் கொண்டதுடன், இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஏனைய வேட்பாளர்களான கலந்தர் லெப்பை முகம்மது ஹிறாஸ் 293, அமீர் முஹம்மது ஷப்ராஸ் 185 வாக்குகளையும் பெற்றுக் கொண்டனர்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் பாராளுமன்றத்திற்கான வாக்களிப்பு நேற்று சனிக்கிழமை (22) நாடளாவிய ரீதியில் பிரதேச செயலகங்கள் தோறும் நடைபெற்றது.

அந்த வகையில், கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்கான இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரைத் தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு மும்முரமாக நடைபெற்றது. ஒருவரைத் தெரிவு செய்வதற்கு மூவர் போட்டியிட்டதுடன், 2015 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.

இலங்கையில் 2020 ஆம் ஆண்டு இளைஞர் பாராளுமன்றத்தை 356 பிரதிநிதிகள் பிரதிநிதித்துவப்படுத்துவார்கள். இதில் பிரதமர், சபாநாயகர், துறைகளுக்கான அமைச்சுப்பதவிகளும் இப்பிரதிநிதிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்டோர்களுக்கு வழங்கப்படும்.

இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ஜெளபர் சஸ்னி முஹம்மது பிறைந்துறைச்சேனை சாதுலியா இளைஞர் கழகத் தலைவரும் ஜெளபர் ஆசிரியரின் புதல்வருமாவார்.

No comments:

Post a Comment