எத்தகைய நிதி சவால்களையும் அரசாங்கம் வெற்றிகரமாக எதிர்கொள்ளும் - எதிர்க்கட்சி தனது சுய அரசியலை கருத்தில் கொண்டு ஆதரவு அளிக்கவில்லை - News View

About Us

About Us

Breaking

Saturday, February 22, 2020

எத்தகைய நிதி சவால்களையும் அரசாங்கம் வெற்றிகரமாக எதிர்கொள்ளும் - எதிர்க்கட்சி தனது சுய அரசியலை கருத்தில் கொண்டு ஆதரவு அளிக்கவில்லை

எதிர்த்தரப்பினர் எத்தகைய சிக்கல் நிலையை ஏற்படுத்திய போதிலும் நிதி விடயத்தில் அரசாங்கம் எத்தகைய சவால்களையும் வெற்றிகரமாக எதிர்கொண்டு நாட்டு மக்களின் நலனுக்கான நிதி தொடர்பான பிரச்சினைகளை கையாளக்கூடிய வல்லமை சமகால அரசாங்கத்துக்கு இருப்பதாக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

பொதுத் தேர்தலுக்கு பின்னர் வரவு செலவுத் திட்டம் ஒன்றை புதிய அரசாங்கம் சமர்ப்பித்து முன்னைய அரசாங்கம் செலுத்த வேண்டிய ஒப்பந்தக்காரருக்கான நிலுவையை செலுத்தி அரசாங்கம் நாட்டை முன்னெடுத்து செல்லும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர்களுடனான சந்திப்பில் அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார். இந்த நிகழ்வில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவௌ கலந்து கொண்டார்.

முன்னைய அரசாங்க காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தக்காரர்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை மற்றும் நாட்டு மக்களின் சேமநலன்களுக்கான நிதியைப் பெற்றுக் கொள்வதற்காவே சமகால அரசாங்கம் பாராளுமன்றத்தில் கடந்த வாரம் குறைநிரப்பு பிரேரணையை சமர்ப்பித்தது.

எதிர்க்கட்சி தனது சுய அரசியல் இலாபத்தை கருத்தில் கொண்டு இதற்கு ஆதரவு அளிக்கவில்லை. இருப்பினும் நாட்டும மக்களின் நலனுக்காக எத்தகைய நிதி நிலைமையையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் அரசாங்கத்துக்கு உண்டு. 

எந்தவொரு அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போதிலும் நாட்டின் நாளாந்த செலவுகளுக்காக கடன் பெற வேண்டிய நிலை உண்டு. இது தற்போதய அரசாங்கத்துக்கு மட்டுமல்ல பதவிக்கு வரும் எல்லா அரசாங்கத்துக்கும் உண்டு.

நாட்டின் நாளாந்த செலவு 12.5 பில்லியன் ரூபாவாகும். மாதத்திற்கு 379 பில்லியன் ரூபா தேவைப்படுகின்றது. அதாவது 37 ஆயிரத்து 900 கோடி ரூபா தேவைப்படுகிறது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

2019 ஆம் ஆண்டு மத்திய வங்கி கணக்கிற்கு அமைவாக நாட்டின் மொத்த வரவு 2 ஆயிரத்து 380 பில்லியன் ரூபா. ஆனால் மொத்த செலவுத் தொகை 4 ஆயிரத்து 550 பில்லியன் ரூபா. வரவு செலவுத் திட்டத்தில் துண்டுவிழும், தொகை பெறப்பட்ட கடன் ஆகியவற்றை கொண்டு இத்தொகை கணக்கிடப்பட்டுள்ளது.

முன்னைய அரசாங்கத்தின் சீர்குலைந்த பொருளாதார செயற்பாடுகள் நாட்டின் வருமானம் மேலும் வீழ்ச்சி அடைய காரணமாக இருந்தது. நாளாந்த செலவை சமாளிப்பதற்காக அரசாங்கம் பிணை முறி மூலம் பணத்தை பெற்றுக் கொள்வது வழமை. 

கடந்த வாரம் பாராளுமன்றத்தில் குறை நிரப்பு பிரேரணையை சமர்ப்பித்த போது எதிர்க்கட்சியினர் முழுமையாக ஒத்துழைப்பு வழங்க மறுத்து விட்டனர். தமது சொந்த அரசியல் இலாபத்தை கருத்தில் கொண்டு செயற்படுகின்றனர். இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment