அம்பாந்தோட்டை - கொழும்பு அதிவேக நெடுஞ்சாலை பஸ் சேவை நாளை ஆரம்பம் - News View

Breaking

Post Top Ad

Sunday, February 23, 2020

அம்பாந்தோட்டை - கொழும்பு அதிவேக நெடுஞ்சாலை பஸ் சேவை நாளை ஆரம்பம்

அதிவேக நெடுஞ்சாலையில் அம்பாந்தோட்டையில் இருந்து கொழும்பு கோட்டை வரையிலான பஸ் சேவை நாளை ஆரம்பமாகவுள்ளது. 

இதற்கமைவாக அம்பாந்தோட்டையில் இருந்து கோட்டை வரையிலான பஸ் கட்டணம் 880 ஆகும். தங்காலையில் இருந்து கோட்டை வரையிலான பஸ் கட்டணம் 680 ஆகும். அம்பாந்தோட்டையில் இருந்து மாக்கும்புர வரையிலான பஸ் கட்டணம் 810 ஆகும். தங்காலையில் இருந்து மாக்கும்புர வரையிலான பஸ் கட்டணம் 610 ஆகும். 

இன்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் திறக்கப்பட்ட மாத்தறை - அம்பாந்தோட்டை நெடுஞ்சாலையில் புதிதாக 10 சொகுசு பஸ்கள் சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த பஸ்கள் மாத்தறை - அம்பாந்தோட்டை அதிவேக நெடுஞ்சாலையில் இருந்து கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் கடவத்தை வரையில் சேவையில் ஈடுபடும். இந்த பஸ் சேவை அம்பலாந்தோட்ட, தங்காலை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய இடங்களில் இருந்து ஆரம்பமாகும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad