நான் போட்டியிடுவதால் தமிழ் பிரதிநிதித்துவம் குறையாது - கருணா அம்மான் - News View

About Us

About Us

Breaking

Sunday, February 23, 2020

நான் போட்டியிடுவதால் தமிழ் பிரதிநிதித்துவம் குறையாது - கருணா அம்மான்

நான் துரோகி என்றால் தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள அனைவரும் துரோகிகளே. ஏனெனில் அன்று மாவையைத் தவிர அனைவரையும் சுடச் சொல்லித்தான் கட்டளையிடப்பட்டது. பிரபாகரன் எப்போதாவது என்னைத் துரோகி என்று சொன்னாரா? யாராவது சொல்லட்டும். பகிரங்கமாக சவால் விடுகிறேன் என முன்னாள் பிரதியமைச்சரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான கருணா அம்மான் காரைதீவில் கூறினார்.

காரைதீவு விபுலாநந்த கலாசார மண்டபத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை கட்சியின் காரைதீவு இணைப்பாளர் தியாகராஜா ஞானேந்திரன் தலைமையில் பொதுப்பிரமுகர்களுடனான கலந்துரையாடலொன்று நடைபெற்றபோது பிரதான உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும்உரையாற்றுகையில் நான் அம்பாறைக்கு வந்தால் தமிழ்ப் பிரதிநிதித்துவம் இல்லாமல் போகுமாம். சரி இந்த கோடீஸ்வரன் இதுவரை இருந்து சாதித்தது என்ன? அவர் தேர்தலில் வெளியிட்ட விஞ்ஞாபனம் உள்ளதே. அதில் ஒன்றையாவது செய்திருந்தால் அவரை மன்னிக்கலாம். ஒன்றையாவது செய்தாரா? இல்லையே.

அம்பாறை மாவட்டத்தில் 1 லட்சத்து 25 ஆயிரம் தமிழ் வாக்குகளுண்டு. சரி 60 வீதமானோர் வாக்களித்தால் 70 ஆயிரம் வாக்குகள் விழும். அப்படிப்பார்த்தால் 2 ஆசனங்களையே பெறக்கூடிய வாய்ப்பு உருவாகும்.

இந்த நிலையில் தமிழ் பிரதிநிதித்துவம் எவ்வாறு இல்லாமல் போகும்?

19 வயதில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் மட்டு. அம்பாறை தளபதியாகியது நான் மட்டுமே. வடமராட்சி ஒப்பரேசன் தொடக்கம் தலைவருக்கு ஆபத்து என்ற நேரத்திலெல்லாம் எமது மட்டு. அணிதான் அங்கு சென்று சரித்திரம் படைத்ததை அனைவரும் அறிவார்கள். எனவே, அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய தேவை எனக்குள்ளது.

காரைதீவு குறூப் நிருபர்

No comments:

Post a Comment