நுரைச்சோலையில் மின் உற்பத்தி வழமைக்கு திரும்பியது - அமைச்சர் மஹிந்தவுக்கு இலங்கை மின்சார சபை அறிக்கை சமர்ப்பிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, February 27, 2020

நுரைச்சோலையில் மின் உற்பத்தி வழமைக்கு திரும்பியது - அமைச்சர் மஹிந்தவுக்கு இலங்கை மின்சார சபை அறிக்கை சமர்ப்பிப்பு

பெப்ரவரி 26ஆம் திகதி இரவு முதல் நுரைச்சோலை மின் நிலையத்திலிருந்து மின் உற்பத்திகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நுரைச்சோலை முதலாம் இலக்க மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு, நீண்ட காலத்துக்கு ஒருமுறை இவ்வாறு ஏற்படும் கோளாறாகவே காணப்படுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு இலங்கை மின்சார சபை அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளது.

எண்ணெய் செல்லும் குழாயொன்று வெடித்துள்ளமையால் நுரைசோலை மின் நிலையம் செயலிழந்தது. 

நுரைச்சோலை முதல்தர மின் நிலையத்தில் கடந்த 16ஆம் திகதி இயந்திரக் கோளாறு ஏற்பட்டமை தொடர்பில் அறிக்கையொன்றை பெற்றுத் தருமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர இலங்கை மின்சார சபைக்கு பணிப்புரை விடுத்திருந்தார். 

நேற்று மாலை இந்த அறிக்கை அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது. அறிக்கையின் பிரகாரம், 2019ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் தொடக்கம் 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை மின் உற்பத்தி நடைபெற்றது. பெப்ரவரி 16ஆம் திகதி வரை இம் மின் உற்பத்தி இயந்திரம் நன்றாக செயற்பட்ட போதிலும் 16ஆம் திகதி அது செயலிழந்தது.

டர்பைட்டிலிருந்து மின் உற்பத்தி செய்யப்படும் பெயாரின் இற்கு அதிக அழுத்தம் ஏற்பட்டதால் எண்ணெய் செல்லும் குழாயொன்று வெடித்துள்ளமையாலேயே இவ்வாறு இயந்திரம் செயலிழந்துள்ளது. இத்தகைய கோளாறுகள் நீண்ட காலத்துக்கொருமுறை இடம்பெறக் கூடியதாகும்.

நாட்டின் மின்சாரத் தேவைக்கருதி இந்த இயந்திரம் மிகவும் பாதுகாப்புடன் புதுபிக்கப்பட்டு வருகிறது. மின் நிலையம் மற்றும் ஊழியர்களின் முழுமையான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இயந்திரத்தை புதுபிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

பெப்ரவரி 26ஆம் திகதி இரவு முதல் 300 மெகா வோல்ட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில் நுரைச்சோலை மின் நிலையத்திலிருந்து மின் உற்பத்திகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment