கொரோனா வைரஸினால் பிரிட்டனில் முதலாவது உயிரிழப்பு! - News View

Breaking

Post Top Ad

Friday, February 28, 2020

கொரோனா வைரஸினால் பிரிட்டனில் முதலாவது உயிரிழப்பு!

யோகோகாமாவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் கொரோனா தொற்றுக்குள்ளான பிரிட்டன் நாட்டுப் பிரஜையொருவர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

இந்த நபர் டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருந்து இறந்த ஆறாவது பயணி என்று ஜப்பானிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

கோவிட் -19 என்றும் அழைக்கப்படும் கொரோனா வைரஸால் இறந்த முதல் பிரிட்டன் இவராவார். தற்போது பிரிட்டனில் 19 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 

டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் பயணித்த நால்வருக்கு கொரோன தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேவேளை கப்பலில் கொரோனா தொற்றுக்குள்ளாகாத பலர் இங்கிலாந்துக்கு திருப்பி அனுப்பப்பட்டும் உள்ளனர். 

டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் 700 க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் குழுவினருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 6 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad