சிரிய விமானப் படையினரின் தாக்குதலில் 34 துருக்கி இராணுவத்தினர் பலி - பதில் தாக்குதலை ஆரம்பித்தது துருக்கி - News View

About Us

About Us

Breaking

Friday, February 28, 2020

சிரிய விமானப் படையினரின் தாக்குதலில் 34 துருக்கி இராணுவத்தினர் பலி - பதில் தாக்குதலை ஆரம்பித்தது துருக்கி

இட்லிப்பில் சிரிய படையினர் மேற்கொண்ட விமானத் தாக்குதலில் 34 துருக்கி இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதை தொடர்ந்து துருக்கி சிரிய எல்லையில் பதட்டநிலை தீவிரமடைந்துள்ளது. 

சிரிய எல்லையில் உள்ள ஹட்டாயின் ஆளுநர் இதனை உறுதி செய்துள்ளதுடன் காயமடைந்த ஏனைய படையினர் சிகிச்சைகளிற்காக துருக்கிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். 

34 துருக்கி இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர் என சிரியாவின் மனித உரிமை நிலவரங்களை கண்காணிப்பதற்கான அமைப்பு தெரிவித்துள்ளது. 

ரஸ்ய உதவியுடன் இட்லிப்பினை கைப்பற்றுவதற்கான இராணுவ நடவடிக்கைளை சிரிய அரசாங்கம் முன்னெடுத்துள்ள அதேவேளை தனது ஆதரவு கிளர்ச்சிக்காரர்களிற்கு எதிரான தாக்குதல்களை முறியடிப்பதற்காக துருக்கி இட்லிப்பிற்கு படையினரையும் ஆயுதங்களையும் அனுப்பி வைத்துள்ளது. 

இதேவேளை இந்த தாக்குதலை தொடர்ந்து சிரியாவின் அரச இலக்குகள் மீது பதில் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக துருக்கி அறிவித்துள்ளது. 

சிரியாவின் அனைத்து இலக்குகள் மீதும் துருக்கியின் வான் வெளி மற்றும் தரைப் படைப் பிரிவுகள் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக துருக்கி அறிவித்துதுள்ளது.

No comments:

Post a Comment