கிளிநொச்சியில் 320 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது - News View

Breaking

Post Top Ad

Friday, February 28, 2020

கிளிநொச்சியில் 320 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

கிளிநொச்சியில் 320 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலிற்கமைவாக சோதனை மேற்கொண்டு கடத்தல் நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து வலைப்பாடு பகுதியில் சோதனை நடவடிக்கையை அவர்கள் முன்னெடுத்துள்ளனர்.

இன்று (29) அதிகாலை 04 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே குறித்த டிப்பர் வாகனத்தில் ஏற்றப்பட்டிருந்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. இதன்போது வாகன சாரதி கைது செய்யப்பட்டார்.

கைதானவர் வவுனியா - மரதன்குளம் பகுதியை சேர்ந்த 47 வயதானவர் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் கைதான சந்தேக நபரையும், மீட்கப்பட்ட கஞ்சா பொதிகளையும் இராணுவத்தினரும் விசேட அதிரடிப்படையினாரும் ஜெயபுரம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் ஜெயபுரம் பொலிஸார் மெற்கொண்டு வருகின்றனர்.

(கிளிநொச்சி நிருபர் - முருகையா தமிழ்செல்வன்)

No comments:

Post a Comment

Post Bottom Ad