பெரிய வெங்காயத்தினை கொள்வனவு செய்வதற்கான உத்தரவாத விலையை ரூபா 20 இனால் அதிகரிக்க அமைச்சரவை முடிவு - News View

Breaking

Post Top Ad

Friday, February 28, 2020

பெரிய வெங்காயத்தினை கொள்வனவு செய்வதற்கான உத்தரவாத விலையை ரூபா 20 இனால் அதிகரிக்க அமைச்சரவை முடிவு

உள்ளூர் விவசாயிகளிடமிருந்து பெரிய வெங்காயத்தினை கொள்வனவு செய்வதற்கான உத்தரவாத விலையை ரூபா 20 இனால் அதிகரிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

விவசாயிகள் தமது விளைச்சலுக்கு நியாயமான விலை கிடைப்பதற்கும், அவர்களை பயிர்ச் செய்கைக்காக ஊக்குவிக்கும் நோக்கிலும் இந்த முடிவை செயல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்கமைய, ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயத்திற்கான உத்தரவாதமளிக்கப்பட்ட கொள்முதல் விலை ரூபா. 60 இலிருந்து ரூபா. 80 ஆக உயர்த்த அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக, அமைச்சரவை இணை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இன்று (28) தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad