ஆளுநர் முஸம்மில் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மருத்துவமனைகளுக்கு 10 நவீன படுக்கைகள் நன்கொடை - News View

Breaking

Post Top Ad

Sunday, February 23, 2020

ஆளுநர் முஸம்மில் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மருத்துவமனைகளுக்கு 10 நவீன படுக்கைகள் நன்கொடை

வடமேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் இலங்கைக்கான தூதுவர் அஹமட் அலி இப்ராஹிம் அல் முஅல்லா (Ahmed Ali Ibrahim Al Mualla) அவர்களினால் குருநாகல் மாவட்டத்தில் உள்ள நான்கு மருத்துவமனைகளுக்கு, சுமார் இரண்டு மில்லியன் ரூபாய் பெறுமதி வாய்ந்த 10 நவீன படுக்கைகள் இன்று நன்கொடை செய்யப்பட்டது.

குருநாகல் நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் குருநாகல் மருத்துவமனையின் பிக்குகளுக்கான வாட்டுக்கு 02 படுக்கைகளும், மதவ மருத்துவமனைக்கு 02 படுக்கைகளும், நிகவெரட்டிய மருத்துவமனைக்கு 03 படுக்கைகளும், கோபேகணை மருத்துவமனைக்கு 03 படுக்கைகளுமாக மொத்தம் 10 நவீன படுக்கைகள் நன்கொடை செய்யப்பட்டன.

இந்நிகழ்வில் வடமேல் மாகாண பௌத்த தேரர்களுக்கான நீதித்துறையின் தலைமைப் பிக்கு ரேகவ ஜினரத்ன தேரர், பூவக்மொடே தம்மதஸ்ஸி தேரர், குருநாகல் நகர மேயர், நகரசபை உறுப்பினர்கள், ஆளுநரின் இணைப்புச் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad