பலாங்கொடை வீதியில் மண்சரிவு - 5 கிராமங்களின் போக்குவரத்து துண்டிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, December 2, 2019

பலாங்கொடை வீதியில் மண்சரிவு - 5 கிராமங்களின் போக்குவரத்து துண்டிப்பு

பலாங்கொடை குருபெவில கல்லெனகந்த வீதியில் இன்று (02) இடம்பெற்ற மண்சரிவு காரணமாக ஐந்து கிராமங்களுக்கான போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பலாங்கொடை நகரிலிருந்து தூர இடங்களுக்கு செல்லும் பஸ் மற்றும் போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளன.

குருபெவில பிரதேசத்தில் பஸ் வண்டிகள் மற்றும் ஏனைய வாகனங்கள் பயணிகளை இறக்கி விடுவதாகவும் அங்கிருந்து நடைபாதைகள் வழியாக கிராமத்தவர்கள் தமது கிராமங்களுக்கு சிறிய வீதிகள் மற்றும் ஒற்றையடிப் பாதைகள் வழியாக சிரமத்துடன் நடையாக செல்வதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

மின்சார சபை, பலாங்கொடை பிரதேச சபை, பிரதேச செயலகம் ஆகியன பொதுமக்களுடன் இணைந்து வீதித் தடையை அகற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
பகுதியில் சிறு தேயிலை தோட்டங்கள் மற்றும் மிளகுச் செய்கைக்கு பிரசித்தமான இப்பிரதேசத்தில் தினமும் தேயிலை கொழுந்து போக்குவரத்து தடைப்பட்டதனால் சிறு தேயிலைத் தோட்டங்களின் தேயிலை கொழுந்து விநியோகம் முற்றாக தடைப்பட்டிருந்தது.

ஏற்பட்டுள்ள நிலைமைக்கு தீர்வு காண்பதற்காக அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துரையாடி மக்களுக்கு தற்காலிக வசதிகளை வழங்குவதற்கான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

வீதித் தடையை அகற்றுவதற்கான முயற்சி தொடர்ந்து இடம்பெற்று வருவதனால் நாளை (03) காலை முதல் போக்குவரத்து நிலைமைகள் சீராகலாம் என இப்பிரதேச மக்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

(இரத்தினபுரி நிருபர் - பாயிஸ்)

No comments:

Post a Comment