முஸ்லிம் பெண்களின் ஆடையில் எதிர்காலத்தில் மாற்றம் செய்யப்படும் - News View

About Us

About Us

Breaking

Thursday, August 22, 2019

முஸ்லிம் பெண்களின் ஆடையில் எதிர்காலத்தில் மாற்றம் செய்யப்படும்

எதிர்காலத்தில் நியமிக்கப்படும் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் பிரதான பொறுப்பு, அரச நிதியை வலுப்படுத்துவதாகும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் இதனை குறிப்பிட்டார். 

நாட்டின் பிரதான பிரச்சினை, அரச நிதிப் பிரச்சினை எனவும், இதன் காரணமாக நாடு திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். 

இந்த நிலைக்கான காரணம் சகல தரப்பினரிடம் இருந்தும் முதலீடுகளை பெற்றுக் கொண்டமையே ஆகும் என பாட்டலி சம்பிக்க ரணக்க மேலும் தெரிவித்தார். 

இதேவேளை, நேற்றைய தினம் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தை மாற்ற அரசாங்கம் எடுத்த நடவடிக்கையை போன்று முஸ்லிம் பெண்களின் முகத்தை மறைத்தல் மற்றும் ஆடை தொடர்பிலான சட்டமும் பொலிஸ் சட்டத்திற்கு கீழ் எதிர்காலத்தில் செயற்படுத்தப்படும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதன்போது தெரிவித்திருந்தார்.

No comments:

Post a Comment