49 நாட்களில் 10,054 சாரதிகள் கைது - ரூபா. 251 மில்லியன் அபராதம் - News View

About Us

About Us

Breaking

Friday, August 23, 2019

49 நாட்களில் 10,054 சாரதிகள் கைது - ரூபா. 251 மில்லியன் அபராதம்

கடந்த 49 நாட்களில் மதுபோதையிலிருந்து 10,054 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

கடந்த ஜூலை 05 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட குறித்த கைது நடவடிக்கைக்கு அமைய, இன்று (23) காலை 6.00 மணி வரையான 49 நாட்களில், மது போதையில் வாகனம் செலுத்திய 10,054 சாரதிகளை பொலிஸார் கைது செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதற்கமைய நீதிமன்றத்தால் குற்றம் நிரூபிக்கப்பட்ட, பயணிகள் போக்குவரத்து வாகன சாரதிகளின் சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படும் எனவும் ஏனைய சாரதிகளின் சாரதி அனுபதிப்பத்திரங்கள், அதிகபட்சம் 12 மாதங்களுக்கு இடைநிறுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் குற்றவாளிகளாக இனங்காணப்படும் சாரதிகளுக்கு குறைந்த பட்ச அபராதமாக ரூபா 25,000 அபராதம் விதிக்கப்படும் என்பதோடு, இவ்வாறு கைதான 10,054 சாரதிகளிடமிருந்து அவர்களது குற்றம் நிரூபணமாகும் நிலையில், சுமார் ரூபா. 251 மில்லியன் அபராதம் மூலம் பெறப்படும் என அவர் தெரிவித்தார்.

குறித்த கைது நடவடிக்கையானது மறு அறிவித்தல் வரை தொடரும் எனவும் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment