இலங்கை திட்டமிடல் சேவை மூன்றாம் தர நியமன பெயர் பட்டியல் வெளியீடு - News View

Breaking

Post Top Ad

Thursday, July 11, 2019

இலங்கை திட்டமிடல் சேவை மூன்றாம் தர நியமன பெயர் பட்டியல் வெளியீடு

இலங்கை திட்டமிடல் சேவையின் மூன்றாம் தரத்திற்கு திறந்த போட்டிப் பரீட்சை மூலம் நியமனத்திற்காக தெரிவு செய்யப்பட்ட 79 பேரின் பெயர்ப்பட்டியலை அரசாங்க சேவை ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. 

இம்மாதம் 22 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் வழங்கப்பட்டுள்ள இந்நியமன பட்டியலில் 63 சிங்களவர்களும், 13 தமிழர்களும், 03 முஸ்லிம்களும் இடம்பெற்றுள்ளனர். நேர்முகப் பரீட்சைக்காக 101 பேர் அழைக்கப்பட்டு 79 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 

நியமனம் பெறவுள்ள தமிழ், முஸ்லிம்களின் பெயர் விபரம் வருமாறு:

ஜே. ரெமின்டன், எப். கெனயூட், வீ. கிருஷ்ணாலினி, எம். அன்டனீஸ், பீ. பிரிந்தினி, ஆர். ஜே. ஜே. மைகல்ராசா, ஏ. புவேந்திரன், கே. இலக்கியா, எஸ். கயூதரன், பீ. ரேவதி, என். நிரேஜன், டி. திவாகரி, எம். அனோஜா ஆகியோர் தமிழ் சமூகத்தை சேர்ந்தவர்களாவர்.

ஐ.எம். நாசிக், எஸ்.ஆர்.ஏ. அரூஸ், ஜே. பாத்திமா இஸ்னா ஆகிய மூவரும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர்.

இதேவேளை தெரிவு செய்யப்பட்டுள்ள சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவர்களை அம்பாறை மாவட்டத்தில் உள்ள சிங்கள மொழி பேசும் பிரதேச செயலகங்களில் காணப்படும் வெற்றிடங்களுக்கு நியமனம் செய்து அங்கு கடமையில் உள்ளவர்களை தமிழ் பேசும் பிரதேச செயலகங்களுக்கு இடமாற்றம் செய்யுமாறு இலங்கை திட்டமிடல் சேவை கிழக்கு மாகாண சங்கம் உள்நாட்டலுவல்கள் அமைச்சிடம் கோரியுள்ளது. 

தமண, உகண, பதியத்தலாவ, லகுகல ஆகிய சிங்கள மொழி மூல பிரதேச செயலகங்களில் தமிழ் மொழி உத்தியோகத்தர்கள் திட்டமிடல் உதவி பணிப்பாளர்களாக கடமையாற்றுவது குறிப்பிடத்தக்கது. 

ஏ.எல்.எம். முக்தார்

No comments:

Post a Comment

Post Bottom Ad