டெங்கு நோய் காரணமாக 40 பேர் பலி - 27,088 பேர் பாதிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, July 11, 2019

டெங்கு நோய் காரணமாக 40 பேர் பலி - 27,088 பேர் பாதிப்பு

டெங்கு நோய் காரணமாக 40 பேர் உயிரிழந்துள்ளதாக, தொற்று நோயியல் பிரிவு தகவல்கள் தெரிவித்துள்ளன.

இவ்வருடத்தின் ஜனவரி முதல் ஜூலை 10 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் டெங்கு நோய் காரணமாக 40 பேர் உயிரிழந்துள்ளதுடன், 27,088 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், இதற்கு அடுத்ததாக கம்பஹா மாவட்டமும் அதனைத் தொடர்ந்து காலி மாவட்டமும் உள்ளன.

கொழும்பில் 5,820 டெங்கு நோயாளர்களும், கம்பஹாவில் 3,536 டெங்கு நோயாளர்களும், காலியில் 2,594 டெங்கு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதே காலப்பகுதியினுள் கொழும்பு மாநகர சபை பிரிவினுள் 1,141 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது. கொழும்பில் 4,679 டெங்கு நோயாளர்களும், மேல் மாகாணத்தில் 11,394 டெங்கு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் கடந்த மே மாதத்தில் 4,239 டெங்கு நோயாளர்களும் ஜூன் மாதத்தில் 5,498 டெங்கு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment