முகத்தை மறைக்கும் வகையில் ஆடையணிவதற்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் - ஞானசார தேரர் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 29, 2025

முகத்தை மறைக்கும் வகையில் ஆடையணிவதற்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் - ஞானசார தேரர் தெரிவிப்பு

முகத்தை முழுமையாக மறைக்கும் வகையில் ஆடையணிவது பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். இலங்கையில் பொது இடங்களில் எவரும் முகத்தை முழுமையாக மறைக்கும் வகையில் ஆடையணிவதற்கு அனுமதிக்கக்கூடாது. அவ்வாறு அனுமதியளித்தால் அதற்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். அரசாங்கம் இந்த விடயத்தில் அடிபணியக்கூடாது என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள பொதுபலசேனா அமைப்பின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, 4 ஆவது தெற்காசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இலங்கை வீராங்கனையான பாத்திமா ஷபியா யாமிக்கிற்கு மாநாயக்க தேரர்கள் சார்பிலும், இலங்கை மக்கள் சார்பிலும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறோம்.

இவர் இலங்கைக்கு பெருமை தேடிக் கொடுத்துள்ளார். சர்வதேச மட்டத்தில் மென்மேலும் வெற்றி பெறுவதற்கு அவரை ஊக்கப்படுத்த வேண்டும். இவ்விடயத்தில் இனத்தை முன்னிலைப்படுத்தி செயற்படக்கூடாது.

வீராங்களை பாத்திமா ஷபியா யாமிக் பற்றி சமூக ஊடகங்களில் பலர் மாறுபட்ட பல விடயங்களை பதிவிடுகிறார்கள். இது முற்றிலும் தவறானது. அனைத்து விடயங்களிலும் மதத்தை முன்னிலைப்படுத்தி செயற்பட முடியாது.

வைத்தியசாலைகளில் முஸ்லிம் தாதியர்கள் முகத்தை முழுமையாக மறைக்கும் வகையில் கலாசார ஆடையணிவது தற்போதைய பிறிதொரு பிரச்சினையாக காணப்படுகிறது. நிகாப் ஆடைக்கு இன்று அனுமதி கொடுத்தால் எதிர்காலத்தில் புர்காவுக்கும் அனுமதி கொடுக்கும் நிலை ஏற்படும்.

முஸ்லிம் மாணவிகள் பாடசாலைக்கு ஹிஜாப் வகையிலான சீறுடை அணிய அனுமதிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச காலத்தில் பாராளுமன்றத்துக்கு தனிநபர் பிரேரணை ஒன்றை கொண்டுவந்தார். சுற்றறிக்கை ஊடாக அதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

முகத்தை முழுமையாக மறைக்கும் வகையில் ஆடையணிவது பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். இலங்கையில் பொது இடங்களில் எவரும் முகத்தை முழுமையாக மறைக்கும் வகையில் ஆடையணிவதற்கு அனுமதிக்கக்கூடாது. அவ்வாறு அனுமதியளித்தால் அதற்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். அரசாங்கம் இந்த விடயத்தில் அடிபணியக்கூடாது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் பிரதான சூத்திரதாரியை கத்தோலிக்க பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்றும் தேடிக் கொண்டிருக்கிறார். சூத்திரதாரியை தேடுவதற்கு மாத்திரமே அவதானம் செலுத்தப்படுகிறது. இஸ்லாமிய அடிப்படைவாதம் மற்றும் அதனுடன் இணைந்த விடயங்கள் தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றார்.

No comments:

Post a Comment