ரிஷாட் எம்.பியிடமிருந்து அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கு பறந்த கடிதம் - News View

About Us

About Us

Breaking

Sunday, August 3, 2025

ரிஷாட் எம்.பியிடமிருந்து அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கு பறந்த கடிதம்

திருகோணமலையில் பொது சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாப்பதில் தலையிடுமாறு, சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவை பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கோரியுள்ளார்.

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், முஸ்லிம் பெண்கள் பணியில் இருக்கும்போது ஹிஜாப் அணிவதைத் தவிர்க்குமாறு விடுத்துள்ள உத்தரவுகள் குறித்து அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

இது அரசியலமைப்பு ரீதியாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட மத சுதந்திரம் மற்றும் கலாசார அடையாளத்திற்கான உரிமைகளை மீறும் செயற்பாடு என அவர் தனது கடிதத்தில் வலியுத்தியுள்ளார்.

முஸ்லிம் பெண்கள் நீண்ட காலமாக ஹிஜாப் அணிந்து சுகாதாரத் துறையில் பணியாற்றி வருவதாகவும், புதிய உத்தரவு நியாயமற்றது மற்றும் வேதனையானது எனவும் ரிஷாட் பதியுதீன் எம்.பி குறிப்பிட்டுள்ளார்.

ஆகையால், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு வரம்புகளுக்குள் மத உடையை அனுமதிக்கும் தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிடுமாறு அமைச்சரை அவர் கோரியுள்ளார்.

மனித உரிமைகள் குழுக்கள் மற்றும் சமூக அமைப்புகளிடமிருந்து இந்த மேல்முறையீட்டுக்கு ஆதரவு கிடைத்துள்ளதாகவும், இதுபோன்ற கட்டுப்பாடுகள் ஒரு தொந்தரவான முன்னுதாரணமாக அமையக்கூடும் எனவும் ரிஷாட் எம்.பி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment