கடந்த சில ஆண்டுகளாக இலங்கை மின்சார சபையில் பணிபுரிந்த பொறியியலாளர்களில் 20 சதவீதமானோர் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் 226 பொறியாளர்கள் இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக இலங்கை மின்சார சபையின் செய்தித் தொடர்பாளர் தம்மிக விமலரத்ன குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் வேலை வாய்ப்புகளுக்காக அவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
புள்ளிவிபரங்களின்படி, இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கை இலங்கை மின்சார சபையின் மொத்த பொறியாளர்களில் 20 வீதமாகும்.
அவர்களில் 85 வீதமானோர் மின் பொறியாளர்கள், மேலும் 8 வீதமானோர் இயந்திர பொறியாளர்கள் மற்றும் 7 வீதமானோர் சிவில் பொறியாளர்கள் என்று கூறப்படுகிறது.
இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் வெளிநாடுகளில் அதிக சம்பளத்துடனும் சலுகைகளுடனும் வாழ்ந்து வருகின்றனர். இலங்கை பொறியியலாளர்களுக்கு வெளிநாடுகளில் அதிக மதிப்பு உள்ளது.
இலங்கை பொறியியலாளர்களின் தொழில்நுட்பத் திறமைகளும், ஆற்றல்களும், தலைமைத்துவப் பண்புகளும் உலக அரங்கில் தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்டு வருகின்றது. இது மிகவும் பெருமைக்குரிய வியடமாகும்.
இலங்கை மின்சார துறையில் உள்ள வளர்ச்சியை இது எடுத்துக்காட்டுகிறது எனவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment