வவுனியா, ஓமந்தை A9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 13 பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (17) இரவு 7.00 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, கண்டியில் இடம்பெற்ற மரண சடங்கு ஒன்றுக்கு சென்று அங்கிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த மகேந்திரா ரக வாகனம் ஓமந்தை, ஏ9 வீதி மாணிக்கர்வளவுப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு விபத்திற்குள்ளாகியதுடன், எதிரே வந்த கனரக வாகனத்துடனும் மோதி விபத்துக்குள்ளாகியது.
விபத்தின்போது குறித்த வாகனத்தில் பெண்கள் சிறுவர்கள் உட்பட 13 இற்கும் மேற்ப்பட்டோர் பயணித்துள்ளனர்.
விபத்தினால் வாகனத்தில் இருந்த அனைவரும் வீதியில் தூக்கி வீசப்பட்ட நிலையில் படுகாயமடைந்தனர்.
இதன்போது வீதியால் பயணித்த பொதுமக்களின் உதவியுடன் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்தில் சம்பவ இடத்திலேயே பெண் உட்பட 2 பேர் உயிரிழந்துள்ளதுடன், 13 பேர் காயமடைந்தநிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் முல்லைத்தீவு விசுவமடு பகுதியை சேர்ந்த 33 வயதான யாழினி, 30 வயதான சுயன் என்று தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்த அனைவரும் ஒரே குடும்பங்களை சேர்ந்த உறவினர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
அவர்கள் கண்டியில் இடம்பெற்ற மரண வீடு ஒன்றிற்கு சென்றுவிட்டு மீண்டும் விசுவமடு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதேவேளை படுகாயமடைந்த சிறுவன் ஒருவன் உட்பட மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விபத்து தொர்பாக ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment