இன்று முதல் அமுலாகிறது GovPay ஊடாக நேரடியாக அபராதம் செலுத்தும் முறை - News View

About Us

About Us

Breaking

Monday, July 28, 2025

இன்று முதல் அமுலாகிறது GovPay ஊடாக நேரடியாக அபராதம் செலுத்தும் முறை

மேல் மாகாணத்தில் இன்று (28) முதல் GovPay ஊடாக நேரடியாக அபராதம் செலுத்தும் முறை செயல்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த தேவையான போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும், இன்று போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் 1000 பேருக்கு கையடக்க தொலைபேசிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

டிஜிட்டல் விவகார அமைச்சின் வலுவான அர்ப்பணிப்பு காரணமாக இந்தத் திட்டம் மிக விரைவாக ஆரம்பிக்க முடிந்ததாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அடுத்த சில மாதங்களில் ஏனைய பொலிஸ் நிலையங்களுக்கும் கையடக்க தொலைபேசிகளை வழங்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக டிஜிட்டல் அமைச்சினால் பொலிஸ் அதிகாரிகளுக்கு பல பயிற்சி திட்டங்கள் வழங்கப்பட உள்ளன, மேலும் இந்த செயல்முறை ஓகஸ்ட் 04ஆம் திகதிக்கு முன்னதாக மேல் மாகாணத்தில் முழுமையாக செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment